Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சும்மள் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்கள் மேல் வழக்கு… வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

vinoth
வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:50 IST)
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது.  தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இந்த படத் தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக சிராஜ் என்பவர் எர்னாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் “இந்த படத்துக்காக நான் 7 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். அப்போது லாபத்தில் எனக்கு 40 சதவீதம் தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை எனக்கான தொகை வரவில்லை. ” என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிய உத்தரவிட்டு அவர்களின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments