Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவின் நிழல் முதல் லுக் போஸ்டரை வெளியிடும் பொ.செ. சிற்பி!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:03 IST)
பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. முதல் லுக் போஸ்டரை மணிரத்னம் வெளியிட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இது சம்மந்தமான அவரின் முகநூல் பதிவில் ‘இரவின் நிழல்’போஸ்டரை தாங்கள் வெளியிட இயலுமா?“ம்”எனில் மகிழ்வேன் “ம்ஹூம்”எனினும் ….
From பொ.செ. சிற்பி:
Sure sir.I will release it with pleasure.ARR told me that the film has come out very Well. Congrats.Looking forward

வார்த்தைகளில் முத்துக்கள் மட்டுமே
உதிர்க்கும் உங்கள் இருவரிடமிருந்தும்
பெறும் வாழ்த்து,பெரும் பாக்கியம்!
So
விரைவில் அவர் வெளியிட….’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments