Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் குட்னைட் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (13:25 IST)
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய காதலியை இழப்பது, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என கலகலப்பாக செல்லும் இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பத்திரிக்கையாளர் திரையிடலில் பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ஒரு பீல்குட் உணர்வைக் கொடுப்பதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments