Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (13:45 IST)
மணிரத்னம் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி, ஜோதிகா, சிம்பு, ஃபகத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா  ராஜேஷ் என பலர் நடிக்கிறார்கள். சிம்பு, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உட்பட பலருக்கு இந்தப் படம் தான்  மணிரத்னம் இயக்கத்தில் முதல் படம்.
இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, ஃபகத் பாசில் ஆகிய மூவருக்கும் அப்பாவாக பிரகாஷ் ராஜும் அம்மாவாக ஜெயசுதாவும் நடிக்கிறார்களாம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் ரோல்தனாம். விஜய் சேதுபதி போலீஸாக நடித்த 'சேதுபதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மணிரத்னம் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவரது ரோல்  பேசப்படுமா?
 
இயக்குநர் மணிரத்னமே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் 2018 ஜனவரியில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது. 
 
மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டிலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், படத்தின் தலைப்பு எப்போது வெளிவரும்  என்பதுதான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குடும்ப உறுப்பினர்களை வைத்து படம்… கவனம் ஈர்க்கும் ‘பயோஸ்கோப்’ அறிமுக வீடியோ!

ஏஐ எம்ஜிஆருடன் நடிக்க போகிறேன்.. சரத்குமார் கூறிய புதிய தகவல்..!

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

அடுத்த கட்டுரையில்
Show comments