Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வருடங்களுக்கு முன் போட்ட டுவீட்: திடீரென வைரலானதால் நடிகை இன்ப அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:42 IST)
10 வருடங்களுக்கு முன் போட்ட டுவீட்
அமெரிக்க துணை அதிபராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே. அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் 10 வருடங்களுக்கு முன் கமலா ஹாரிஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது திடீரென அந்த டுவீட் வைரலாகி வருகிறது 
 
பிரபல பாலிவுட் நடிகை  மல்லிகா ஷெராவத் தனது டுவிட்டரில் கடந்த 2010ஆம் ஆண்டு டுவிட் ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் அப்போது சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரீஸ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவரது பணியை பார்த்து தாம் ஆச்சரியம் அடைந்ததாகவும், அவரை பார்த்து தான் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் பதிவு செய்திருந்தார் 
 
இந்த ட்விட்டை தேடி கண்டுபிடித்து தற்போது வைரல் ஆகி வருகின்றனர் நெட்டிசன்கள். பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்த ஒரு டுவீட் தற்போது திடீரென வைரலாகி வருவதை பார்த்து ஆச்சரியம் அடைந்த மல்லிகா ஷெராவத் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். மேலும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments