Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்கிரி ரிட்டர்ன்ஸ்...? மகேஷ்பாபுவை கலாய்க்கும் ராம் கோபால் வர்மா

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (12:01 IST)
ஒருகாலத்தில் ஓஹோவென்று அண்ணாந்து பார்த்த ராம் கோபால் வர்மா இப்படி தரை டிக்கெட்டுக்கு கீழிறங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆசிரியர் - மாணவன் உறவைச் சொல்லும் ஸ்ரீதேவி படத்தை எடுக்கப் போவதாக அறிவித்து அனலை கிளப்பியவர் அடுத்த டெரருக்கு தயார்.
 
வர்மாவுக்கு தெலுங்கில் பவன் கல்யாண்தான் இஷ்ட தெய்வம். பவன் உடனே கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகணும் என்று பணம் தராத பிஆர்ஓவாக சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதேநேரம் மகேஷ்பாபு என்றால் மனசு மக்கர் செய்யும். ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தகவல் மகேஷ்பாபு ரசிகர்களை வெறி பிடிக்க வைத்துள்ளது. 
 
என்னவாம்...?
 
வர்மா விரைவில் போக்கிரி ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை எடுக்கப் போகிறாராம். போக்கிரி மகேஷ்பாபு நடித்த படம். தமிழில் விஜய் அதேபெயரில் அப்பட ரீமேக்கில் நடித்தார். இந்தியில் பிரபுதேவா சல்மானை வைத்து வான்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் அங்கேயும் ஹிட்.
 
போக்கிரி ரிட்டர்ன்ஸில் மகேஷ்பாபுவை வர்மா கலாய்க்கப் போவதாக கேள்வி. தெலுங்குப் படங்களையும், நடிகர்களையும் கலாய்க்கும் சம்பூர்ணேஷ் பாபு என்ற நடிகரைத்தான் இதில் நடிக்க வைக்கப் போகிறாராம். அதனால்தான் மகேஷ்பாபுவின் ரசிகர்களிடமிருந்து கொடுரமான பற்கடிப்பு சத்தம் வருகிறது.
 
எக்கு தப்பாக மாட்டினால் மசாஜ் செய்துவிடப் போகிறார்கள் பார்த்து.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments