Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (18:28 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது.

இப்படி பல சாதனைகளைப் படைத்த மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆனதின் மூலம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 2 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸான இந்திய படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை மகாராஜா படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments