Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் அடுத்த படத்தில் இருந்து விலகிய கார்த்திக் சுப்பராஜ்.. இதுதான் காரணமா?

vinoth
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:33 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் ஒரு படத்தோடு அவர் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இருமுறை விஜய்யை சந்தித்து கதை சொல்லி, அந்த கதைகள் விஜய்க்கு பிடிக்கவில்லை என கார்த்திக் சுப்பராஜே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது கார்த்திக் சுப்பராஜ் விஜய் 69 படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொலல்ப்படுகிறது. அவர் மகான் 2 திரைப்படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments