Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எது ஜெயிக்கும் சிங்கத்தோட பலமா? - நரியோட தந்திரமா? மாஃபியா டீசர்

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (18:53 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


 
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பியவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதனை தொடர்ந்து அரவிந்த் சுவாமியை ஹீரோவாக வைத்து நரகாசுரன் படத்தை இயக்கினார். ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. 
 
இதற்கிடையில் அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை பார்த்துவிட்டு கார்த்திக் நரேனையும் படக்குழுவினரையும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை சற்றுமுன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 
 
இந்த டீசரில் அருண் விஜய்யும் , பிரசன்னாவும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். குறிப்பாக ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? - நரியோட தந்திரமா? என்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக  ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments