Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Mahendran
சனி, 18 மே 2024 (15:38 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் 50 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் 'மாவீரன்’ தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் பிரபல முன்னணி முன்னணி நடிகை ஒருவர் நாயகி ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் சித்தார்த் நடிக்கும் நாற்பதாவது படம் என்பதால் சித்தார்த் 40 என தற்போதைக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தை ஸ்ரீகணேஷ் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’8 தோட்டாக்கள்’  என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தற்போது ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments