Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் சினேகன் கார் மோதி இளைஞர் காயம் – வழக்குப்பதிவு!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:20 IST)
சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகனின் கார் மோதி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான சினிமா பாடலாசிரியர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கமல்ஹாசன் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்  சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதியதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமயம் போலீஸார், 2 பிரிவுகளின் கீழ் சினேகன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments