லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம், மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியவர் அந்த படங்களின் இணை இய்ககுனர் விஷ்ணு எடாவன். இந்த படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலீஸான டாடா, லியோ மற்றும் தேவரா ஆகிய படங்களில் கூட அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கும் படத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க உள்ளாராம்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.