Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லவ் டுடே படத்தின் தெலுங்கு டிரைலர் ரிலிஸ் தள்ளிவைப்பு… பின்னணி என்ன?

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (09:03 IST)
நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 20 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற லவ்டுடே படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு முயற்சி செய்து வருகிறார். இப்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 350 திரைகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு டிரைலர் வெளியாவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா இயற்கை எய்தியதை அடுத்து டிரைலர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தைக் கௌரவித்த தமிழக அரசு!

விஜய்யை வச்சு 300 கோடி ரூபாய்ல படம் பண்ணி 500 கோடி ரூபாய் சம்பாதிக்குறது பெருசில்ல… இயக்குனர் சுசீந்திரன் கருத்து!

யார் அந்த பிரகாஷ்?… வைரலாகும் விடாமுயற்சி மீம்கள்.. பதிலளித்த மகிழ் திருமேனி!

தனுஷ் படத்துடன் ’டிராகன்’ போட்டியா?... பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில்!

கேம்சேஞ்சர் பற்றிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்ட அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments