Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் 171 படத்தின் அப்டேட்டை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (08:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். அதற்குள் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து லோகேஷ் படத்துக்கு தயாராகி விடுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் “தலைவர் 171 படத்துக்கான கதையை அடுத்த வாரம் முதல் எழுத உள்ளேன். இத்தனை நாட்கள் லியோ படத்தின் வேலையில் பிஸியாக இருந்ததால் இந்த கதையில் கவனம் செலுத்த முடியவில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments