Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷின் முதல் தயாரிப்பு படத்தை வெளியிடும் பிரபல விநியோக நிறுவனம்!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (11:34 IST)
தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக தன்னுடைய கேரியரை தொடங்கிய லோகேஷ் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார்.  இதையடுத்து அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலமாக உறியடி விஜய்குமாரின் 'ஃபைட் கிளப்' என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் படம் இது. இந்த படத்தை லோகேஷின் உதவியாளர் இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி கதை எழுத விஜய்குமார் வசனத்தை எழுதியுள்ளார்.

டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments