Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் கமல் & லோகேஷ் கனகராஜ் கூட்டணி!

vinoth
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:38 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் இணந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ் “கமல் சாரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது பெரிய விஷயம். மீண்டும் அவருடன் ஒருமுறை இணைந்து பணியாற்ற உள்ளேன். அது விக்ரம் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க… ளே அஜித்தேக்குப் பதில் வேறு கோஷம்… அடங்காத அஜித் ரசிகர்கள்!

சூர்யா நிறுவனத்துக்கு இழப்பீடு கொடுத்த சுதா கொங்கராவின் தயாரிப்பாளர்!

வெற்றிமாறன் கதையை இயக்கும் கௌதம் மேனன்.. ஹீரோ ஜெயம் ரவியா?

ஓய்வுக்குமுன் இன்னோர் உச்சம் தொடுங்கள்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைரமுத்து..!

இந்திய சினிமா வசூலில் மைல்கல் தொட்ட புஷ்பா 2… 6 நாளில் 1000 கோடி ரூபாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments