Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவியை மொய்க்கும் இயக்குனர்கள் – பிடிகொடுப்பாரா ?

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (09:05 IST)
அடங்க மறு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவியை இயக்க கோலிவுட்டில் உள்ள முன்னணி இயக்குனர்கள் சிலர் போட்டி போட்டு வருகின்றனர்.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்கமறு படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குனரின் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

இந்த 3 படங்களை இயக்க செல்வராகவன், ஹரி மற்றும் அகமது ஆகிய இயக்குனர்கள் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்திலும்  ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவி தரப்பில் இருந்து இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.  விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இப்போதைக்கு ஜெயம் ரவி புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் கோமாளி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவரோடு காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments