மீண்டும் பையா ஸ்டைலில் ஒரு படம் இயக்கும் லிங்குசாமி… ஹீரோவாக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன்!

vinoth
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (10:16 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் லிங்குசாமி. அவர் இயக்கிய ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பையா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் சோஷியல் மீடியாவில் மோசமான கேலிகளை எதிர்கொண்டது.

படம் பற்றி  லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் சண்டகோழி 2 மற்றும் வாரியர் ஆகிய படங்களை இயக்கினாலும் அவரால் இன்னும் கடன் சுமையில் இருந்து மீளமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய ஹிட் படமான  ‘பையா’ ஸ்டைலில் ஒரு ட்ராவல் படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்தில் கதாநாயகனாக இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

கோழைத்தனமான பதில்களை சொல்கிறார்... நாமினேஷனுக்கு காரணம் சொன்ன போட்டியாளர்கள்..!

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments