Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிகாவில் மைக் டைசனோடு படப்பிடிப்பு… லைகர் படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (16:41 IST)
விஜய் தேவாரகொண்டா நடிக்கும் லைகர் படத்தில் மைக் டைசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் பாக்ஸராக நடிக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மைக் டைசன் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு லைகர் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் மைக் டைசன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது மைக் டைசன் மற்றும் விஜய் தேவாரகொண்டா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க லைகர் படக்குழுவினர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments