Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துக்கு முதலில் வைத்த பெயர் இதுதான்… ரகசியத்தைப் பகிர்ந்த லோகேஷ்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (11:31 IST)
சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஏற்கனவே படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்போது அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் லலித், தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்காததால் படம் காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் பல இணையதள சேனல்களில் பங்கேற்று படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வரும் அவர் “லியோ படத்துக்கு முதலில் ஆண்டனி என்றுதான் தலைப்பு வைத்திருந்தோம். பின்னர்தான் லியோ என்று மாற்றப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments