Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

vinoth
சனி, 18 மே 2024 (16:20 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக சொல்லப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துரை செந்தில்குமார் அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம். இதனால் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments