Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் படம்… நாளை தொடங்கும் ஷூட்டிங்?

லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கும் படம்… நாளை தொடங்கும் ஷூட்டிங்?

vinoth

, புதன், 21 பிப்ரவரி 2024 (10:18 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக சொல்லப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாளை பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராயன் படத்தில் நான் வெறும் நடிகர் மட்டுமே… செல்வராகவன் பதில்!