Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கான ‘குரங்கு பெடல்’- ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 25 ஏப்ரல் 2024 (08:18 IST)
தமிழ் சினிமாவில் மதுபானக் கடை என்ற வித்தியாசமான திரைப்படம் மூலமாக அறிமுகமானார் இயக்குனர் கமலக் கண்ணன். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து அவர் சிபிராஜ், ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் வட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இந்த படம் விமர்சன் ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து அவர் குழந்தைகளை வைத்து குரங்கு பெடல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன தன்னுடைய ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார். இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் மே 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கோடைவிடுமுறையில் கண்டுகளிக்கக் கூடிய ஒரு அழகான திரைப்படமாக குரங்கு பெடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்தது வேள்பாரிதான்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

5 பாட்டிருக்கி… 75 கோடி செலவு செஞ்சிருக்கி… கேம்சேஞ்சர் தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி திரைப்படம்.. யாரெல்லாம் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments