Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூவத்தூர் -திரிஷா விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகான் ஆடியோ வெளியீடு!

Sinoj
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (20:56 IST)
முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.
 
இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு நடிகரும் ஜன நாயக புலிகள் என்ற கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,  ''அரசியல்வாதி என்ற பெயரில் அருவருக்கத்தக்க  வகையில் என் திரைத்துரையைச் சேர்ந்த சக நடிகைகள், சகோதரிகளை என் பெண் குடும்பத்தாரை எனது துறையில் உள்ளவர்களை யார் குறைகூறினாலும்,அது ஆண் வர்க்கத்திற்கும் பொருந்தும். வருத்தப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்கிறார். சமத்துவம் படைத்த இந்தத் தமிழகத்தில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சக நடிகையை இப்படி பேசியுள்ளது என் மனதை நோகச் செய்துள்ளது. இது சமூகத்தில் ஆபத்தானவை. பேசியவர் மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments