Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் விவகாரம் - லதா ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்

கோச்சடையான் விவகாரம் - லதா ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (10:52 IST)
கோச்சடையான் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர், ஆட் பீரோ என்ற நிறுவனத்திடமிருந்து கோச்சடையான் படத்துக்காக பல கோடிகள் கடன் பெற்றார்.


 


கோச்சடையானின் உரிமையை இந்த கடனுக்கு பதிலாக தருவதாகவும் ஒப்பந்தமானது. இதில் முரளி மனோகர் தரப்பில் அவருக்கு உத்தரவாத கையெழுத்து போட்டவர் லதா ரஜினிகாந்த்.
 
ஒப்பந்தத்தை மீறி கோச்சடையான் படத்தின் உரிமையை முரளி மனோகர் ஈராஸ் நிறுவனத்துக்கு தந்தார். ஆட் பீரோவிடமிருந்து கடனையும் அவர் முழுமையாக அடைக்கவில்லை. அதனால் ஆட் பீரோ முரளி மனோகர் மற்றும் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்தது. 
 
ஆட் பீரோ நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று ஆட் பீரோவின் மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்.
 
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது ஆட் பீரோ வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

பிரேக்கிங் பேட் சீரிஸில் இடம்பெற்ற வீட்டை 34 கோடி ரூபாய்க்கு விற்க உரிமையாளர் முடிவு!

ரிலீஸ் தேதியில் சிறு குழப்பம்… வீர தீர சூரன் படக்குழு எடுக்கப் போகும் முடிவு என்ன?

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments