Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த கேஜிஎஃப் வில்லன் நடிகர்!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (14:41 IST)
சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விரைவில் படத்தின் பீரியட் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் இந்த படத்தில் கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமான அவினாஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் விரைவில் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments