Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் இணைகிறாரா கீர்த்தி சுரேஷ்?

vinoth
வியாழன், 25 ஜனவரி 2024 (07:00 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு துபாயில் இருந்து தற்போது திரும்பியுள்ளதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இன்னொரு முன்னணி நடிகையும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments