Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பெங்குயின்’ டீசரை வெளியிடும் 4 முன்னணி நடிகைகள்

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (19:34 IST)
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெங்குவின்’ என்ற திரைப்படம் வரும் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த டீசரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் நான்கு முன்னணி நடிகைகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் நடிகை திரிஷாவும், மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியாரும், ஹிந்தியில் நடிகை டாப்ஸியும், தெலுங்கில் நடிகை சமந்தாவும் வெளியிட உள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் நாளை மதியம் சரியாக 12 மணிக்கு ஒரே நேரத்தில் நான்கு நடிகைகளும் தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் வேறு வழியின்றி அமேசானில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments