Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

J.Durai
புதன், 24 ஏப்ரல் 2024 (14:50 IST)
படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, 'படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து
 
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர்.
 
வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து
 
ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு மற்றும் பிரபல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
 
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத்தமுத்து இயக்கி உள்ளார். ஏ.கே.ராம்ஜி இசையமைத்து உள்ளார். ஒளிப்பதிவு கே.ஆறுமுகம். நடனம் பவர் சிவா. ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார்!
 
கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளில் இசை வெளியீட்டை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறாள் வேட்டைக்காரி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments