Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி விவகாரத்தில் கார்த்தியிடம் பல்ப் வாங்கி சமாளித்த கஸ்தூரி

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (21:28 IST)
இன்று நடைபெற்ற 'ஜூலை காற்றில்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்ட விவகாரம் குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் இன்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:

"ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது ஒர்க் அவுட் ஆயிருச்சு. இதை நம்பி  கொந்தளிக்கிற எமோஷனல் நபர்கள் கண்டிப்பாக ஜூலை காற்றில் படத்தை என்ஜாய்  பண்ணுவீங்க' என்று கூறி சமாளித்தார்.

இருப்பினும் கார்த்தியின் ரசிகர்கள் கஸ்தூரியை கிண்டல் செய்வதை இன்னும் நிறுத்தவில்லை. பொது இடத்தில் செல்பி எடுக்கும் ஆர்வக்கோளாறில் ரசிகர்கள்தான் இருக்கின்றார்கள் என்றால் ஒரு நடிகையே இப்படி நடந்து அசிங்கப்படலாமா? என்பதே திரையுலகினர்களின் கேள்வியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments