Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசேதான் கடவுளடா படத்தை இப்போது ரிலீஸ் செய்யமாட்டோம்… நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் பதில்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:13 IST)
ஏவிஎம் தயாரிப்பில் 1972 ஆம் ஆண்டு முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் காசேதான் கட்வுளடா. இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று வரை வந்த தமிழ் நகைச்சுவை படங்களில் கல்ட் கிளாசிக்காக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் இந்த படம்  மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு ஆகியோர் முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் நடிக்க, மனோரமா கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதையடுத்து சில மாதங்களுக்கு படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு 1.75 கோடி ரூபாய் பைனான்ஸ் செய்த ராஜ்மோகன் என்பவர் ‘தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக’ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் தரப்பு “மனுதாரருக்கு தரவேண்டிய மீதித்தொகையை திருப்பித் தரும் வரை இந்த படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் செய்யமாட்டோம்” என உறுதியளித்துள்ளது. இதை ஏற்ற நீதிமன்றம் அடுத்த விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments