Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட வலிமை வில்லன்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:40 IST)
வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயா இனிமேல் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

கார்த்திகேயா தெலுங்கில் அறிமுகமான ஆர் எக்ஸ் 100 எனும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர் எந்த படமும் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால்தான் அவர் இப்போது வில்லனாக கூட நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் இனிமேல் ரசிகர்கள் விரும்பும் படத்தைக் கொடுப்பேன் என்றும் தன்னுடைய தவறுகளை உணர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

சர்ச்சையைக் கிளப்பிய எம் எஸ் பாஸ்கரின் பேச்சு… ப்ளுசட்ட மாறன் போட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments