Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சூர்யாவின் கங்குவா படத்தின் ஷூட்டிங்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (16:24 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள  நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படம் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதியில் கார்த்தி ஒரு சிறப்புத் தோற்றத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அது ஒரு எதிர்மறைக் கதாபாத்திரம் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அதற்கான ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கார்த்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் சூர்யாவும் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments