Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கார்த்தி பிரேம்குமார் இணையும் படத்தின் ஷூட்டிங்!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:47 IST)
கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து இதே படத்தை பிரேம்குமார் தெலுங்கில் ரீமேக் செய்தார். அதில் சமந்தாவும் ஷர்வானந்தும் நடித்திருந்தார்கள். ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை அந்த படம் பெறவில்லை.

அதையடுத்து பிரேம் குமார் கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஆனார். கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூர் பகுதியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments