Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ‘மெய்யழகன்’ பட ஆடியோ ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:36 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரேம்குமார், கோவிந்த் வசந்தா கூட்டணியில் உருவான 96 பட பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததால் மெய்யழகன் பட பாடல்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments