Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் ’சர்தார் 2’ படத்தின் நாயகி இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (17:41 IST)
கார்த்தி நடித்துவரும் ’சர்தார் 2’  என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
முதல் பாகத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்தது போலவே இரண்டாம் பாகத்திலும் அவர் இரண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் முதல் பாகத்தில் நடித்த நாயகிகள் யாரும் இந்த படத்தில் இல்லை என்றும் கூறப்பட்டது. 
 
இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் அல்லது பிரியங்கா மோகன் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் என்பதை உறுதி செய்துள்ளது. 
 
ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த மாறன், விக்ரம் நடித்த தங்கலான்  உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு இன்னொரு பெரிய நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்