Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘கார்த்தி 25’ படத்தின் திரைக்கதை பணியில் இறங்கிய இயக்குனர்!

‘கார்த்தி 25’ படத்தின் திரைக்கதை பணியில் இறங்கிய இயக்குனர்!
, செவ்வாய், 24 மே 2022 (15:39 IST)
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளன.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா சூர்யா படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!