Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகில் மன்னன்- பொதுவாழ்வில் கர்ணன் விஜயகாந்த்! சினோஜ் சிறப்பு கட்டுரை!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (12:17 IST)
காலம் யாருக்கும் காத்திருக்காது. ஆனால், காலத்தை அறிந்தவர்கள் அதன் மூலம் தங்களுக்கான   வெற்றியை   தங்கள் திறமை மற்றும் செயல் மூலம் அறுவடை செய்கிறார்கள்.
 

அந்தவகையில், விஜயராஜ் என்பவர் விஜியாக சினிமாத்துறையில் அறிமுகமாகி, கேப்டனாக வெற்றிக் கொடி நாட்டியவர். தன் 50வது படத்தையும்,  100வது படத்தையும் வெற்றியாக ரசிகர்களுக்குப் பரிசளித்தவர்.
 

விஜயகாந்த் என்ற  நடிகர், கொடுத்துச் சிவந்த வள்ளல் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அனைவராலும் சொந்தம் கொண்டாடப்பட்டவர்.

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் அரிசி மில் ஓனரின் மகன் என்ற பின்புலம் இருந்தாலும் சென்னை வந்து, விஜயகாந்த் என்று பெயர் மாற்றி, ரோகிணி ஓட்டலில் சாதாரணமாகத் தங்கியிருந்து அவரது அடுத்தடுத்த வெற்றிக்கு, சினிமாவில் தன்னையொரு ஜாம்பாவானாக  நிலைநிறுத்த அவர் பல ஆண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது.

ஆனால், மற்ற நடிகர்களின் வெற்றியைப் போலன்றி, விஜயகாந்தின் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு படத்தின் வெற்றியும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சினிமா வாய்ப்பு தேடும்  நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் வெற்றியாகவும், அவர்கள் சினிமாத்துறையில் தங்கள் திறமையின் மூலம் ஈடுபடுத்திக் கொள்வதற்கான  ஒரு முகாந்திரமாகவும் அமைந்தது.

இன்றளவும் விஜயகாந்தை கேப்டன் என்று ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அழைக்கக் காரணம், ஆர்.கே.செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் தான் காரணம் என்றாலும், அவரை நடிகர் என்ற பிம்பத்தை தாண்டி, வள்ளல் என்ற காரணப்பெயரைத் தாண்டி, அவரை அரசியலில் ஒரு சகாப்தமாகவே எல்லோரும் பார்த்தனர்.

விஜயகாந்த் சினிமாவில் நுழையும் காலத்தில்  அரசியலில் கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி,ஆரும் பிரபல அரசியல் தலைவர்களாக இருந்தனர். அப்போது, சினிமாவில் புகழின் உச்சாணிக்கொம்பில் இருந்த சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும், அரசியல் என்ற பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டனர்.
 

அடுத்த சில ஆண்டுகளில் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் சாணக்யத்தனத்திற்கு முன் சினிமாவில் இருந்து வந்து யாரும் தாக்குப்பிடிக்காமல் இருந்தபோது, கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தேமுதிக என்ற கட்சியை நிறுவினார் விஜயகாந்த்.

அவர் கட்சியைத் தொடங்கி பல எதிர்ப்புகளை சந்தித்த போதிலும், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு சினிமாவிலும், அரசியலும் பல வகையில் சூழ்ச்சிகள் இருந்தாலும், தனியொருவராக அனைத்தையும் கடந்து வந்தார்.

அரவது வெள்ளந்தித்தனம் அவரிடமிருந்த எம்.எல்.ஏக்களளை பறிக்கொடுக்க வைத்தது. ஆனால், அவரது உடல் நலக்கோளாறு அவரது பலம், பலவீனம் இரண்டையும் மீடியாக்களின் வழி கிசுகிசுக்க வைத்து, அவரது ஆளுமையை சரியவைக்க முயன்றது.
 


சினிமா, பொதுவாழ்க்கை, அரசியல் என எல்லாவற்றையும் ஆளுமைமிக்க இருபெரும் அரசியல்தலைவர்கள் வையத்தில் வாழ்ந்திருந்த காலத்திலேயே இருவரையும் எதிர்த்து அரசியல் செய்தாலும், அவர்கள் இறப்பின்போது, குழந்தைபோன்று தேம்பி அழுத வெள்ள மனதுக்காரர் விஜயகாந்த்.

அவரது தைரியம், நேர்மை, போர்க்குணம், அவரது தொண்டர்களுக்கு என்றும் வழிகாட்டும். அக்கட்சியை வழி நடத்தும் என்று ஆறுதல்கொள்வோமாக.

விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
 
#சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வில்லன் ஆகிறாரா ஜீவா?… கார்த்தி 29 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

மீண்டும் இணையும் விக்ரம் பிரபு & டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி…!

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments