Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா? மிரள வைக்கும் தகவல்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (07:32 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முன்னர் 10 மொழிகளில் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட கங்குவா திரைப்படம் இப்போது 38 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சூர்யா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக கங்குவா உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments