Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகாவின் குழந்தைதான் கல்கி படத்தை உருவாக்கி உள்ளது… கமல்ஹாசன் பேச்சு!

vinoth
புதன், 26 ஜூன் 2024 (15:06 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்தியா முழுமைக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்துக்காக கமல்ஹாசன் படம் ரிலீஸாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். முதல் பாகத்தில் கமல்ஹாசன் இடம்பெறும் காட்சிகள் 19 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், கர்ப்பமாக இருக்கும் தீபிகாவின் குழந்தையை குறிப்பிட்டு “அந்த குழந்தைதான் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் அந்த குழந்தையும் திரைப்படம் எடுக்கும் என நம்புவோம்” எனக் கூறியுள்ளார். கதைப்படி தீபிகாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தைதான் கல்கி படத்தின் கதையில் கருவாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments