Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட தக்லைஃப் பட ஷூட்டிங்!

vinoth
புதன், 24 ஜனவரி 2024 (08:46 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி மற்றும் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்துக்கான அரங்கு அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாததால் ஷூட்டிங் ஜனவரி இறுதியில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments