Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி பற்றி பதிலளிக்க மறுத்த கமல்

Webdunia
சனி, 27 மே 2017 (12:27 IST)
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார் கமல்.


 

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கமலிடம், அரசியல் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதற்கு பதிலளிக்கிறேன்” என்றார் கமல்.

ரசிகர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் சூழ்நிலை பற்றிப் பேசிய ரஜினி, ‘சிஸ்டம் சரியில்லை’ என்று குறிப்பிட்டார். இதுபற்றி கமலிடம் கேட்டபோது, “எல்லோர் எண்ணமும் அதுதான். அதைத்தான் ரஜினி பேசியிருக்கிறார். அவர் சொன்னதில் தவறில்லை” என்றார்.

‘சினிமாக்காரர்கள் ஆண்டதால்தான் தமிழ்நாடு பாழ்பட்டுக் கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கமலிடம் கேட்டபோது, “இதுவரைக்கும் பதில் சொன்னதே போதும் என நினைக்கிறேன். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
 

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments