Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் அரசியல் அழைப்புக்கு நன்றி தெரிவித்த விஜய்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (13:07 IST)
கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவருடைய கட்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட ஒருசிலரை தவிர வேறு யாரும் இணையவில்லை.
இந்த நிலையில் விஜய்யை அரசியல் களத்திற்கு அழைப்பதாக ட்விட்டரில் கூறிய கமல்ஹாசனுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.
 
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக டுவிட்டர் மூலம் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்கிற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘எனது அனைத்துத் தம்பிகளையும் வரவேற்கிறேன்,  அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்தமான தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறினார்.
 
இதனை தொடர்ந்து விஜய் செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செல்போன் குறுந்தகவல் மூலமாகவும்  கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் விஜய் ‘தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.
 
கமல், ரஜினிக்கு அடுத்தபடியாக அரசியலில் விஜய் களமிறங்குவார் என ஒரு யூகம் கிளம்பியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் வருகைக்கு அடித்தளம் போட்டார் விஜய். ஆனால் சில அரசியல் நிர்ப்பந்தங்களால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த முடிவை  தள்ளிவைத்தார் என்பது குறிப்படத்தக்கது. அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ படத்திலும் நடப்பு அரசியலை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments