Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 2விலிருந்து கமல் விலகல்?

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (08:20 IST)
பிக்பாஸ் 2 வில் ஏற்பட்ட பிரச்சனையால் கமல் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது பிப்க்பாஸ் 2 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி.யில் பிரம்மாண்ட செட் போட்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் 2 விற்காக 400க்கும் மேற்பட்டோர் செட் அமைத்தல், டெக்னீஷியன் உள்ளிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, பிக்பாஸ் 2 செட்டில் 400 பணியாளர்களில் 41 பேர்(கமல் உட்பட) மட்டுமே தமிழகத்தை சார்ந்தவர்கள், என்பதால் இதனைக் கண்டித்து 41 பேரும் இனி பணிபுரிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த 41 பேரில் கமலும் உள்ளதால், எங்களது உணர்வுக்கு மதிப்பளித்து அவர் இந்நிகழ்ச்சியில் பணிபுரிய மாட்டார் என நம்புவதாக செல்வமணி தெரிவித்தார்.
 
இதே போல் பிக்பாஸ் 1னிலிலும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கமல் 50 சதவீதம் தமிழக தொழிலாளரை பணியமர்த்த செய்து இந்த பிரச்சனைக்கு முடிவு தந்தார். அதே போல் இப்பொழுதும் இந்த பிரச்சனைக்கு முடிவு காண்பாரா? அல்லது ஃபெப்சி கோரிக்கையை ஏற்று நிகழ்ச்சியை விட்டு விலகுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments