Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0-வில் ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (16:04 IST)
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமாருக்கு பதிலாக கமல் நடிக்க கேட்டதாகவும், ஆனால் கமல் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக ஷங்கர் கூறியுள்ளார். 
 
 2.0 படத்தின் வில்லன் வேடம் மிக முக்கியமானது. அதனால்  இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகினேன். அர்னால்டும் ஆர்வமாக இருந்தார்.ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்கும் இடையேயான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போனது. 
 
அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகினார்களாம் .ஆனால், அவர் சங்கரிடம் இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள்.
 
இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது. அந்த மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார் இயக்குனர் சங்கர் . 
 
 2.0 படத்தில் மொத்தம் 2100 கிராபிக்ஸ் காட்சிகள் இடப்பெற்றிருக்கிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments