Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஷ் பாபுவை பாராட்டிய கமல்

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (14:21 IST)
கமலிடமிருந்து பாராட்டை பெறுவது கல்லிலிருந்து நார் உரிப்பது போல. அத்தனை கடினம். ஸ்ரீமந்துடு படத்துக்காக கணிசமாக நார் உரித்திருக்கிறார் மகேஷ் பாபு.
 

 
கடந்த ஆகஸ்ட் 7 -ஆம் தேதி ஸ்ரீமந்துடு வெளியானது. தமிழில் அதே தேதியில் செல்வந்தன் என்ற பெயரில் படத்தை வெளியிட்டனர். மகேஷ் பாபு, ஸ்ருதி நடித்த இந்தப் படத்தை கொரட்டால சிவா இயக்கியிருந்தார்.
 
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய மகேஷ் பாபு, நான் கமலின் தீவிர ரசிகன். அவரது மகளுடன் நடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றார். இப்போது கமலின்முறை.
 
மகள் ஸ்ருதியுடன் ஸ்ரீமந்துடு படத்தைப் பார்த்த கமல், மகேஷ் பாபுவின் நடிப்பையும் நடனத்தையும் வெகுவாக பாராட்டினார். சமூக சிந்தனையுள்ள படத்தை எடுத்ததற்காக இயக்குனர் கொராட்டால சிவாவுக்கும் அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
 
பின்தங்கிய கிராமத்தை மகேஷ் பாபு முன்னேற்றுவது போல் ஸ்ரீமந்துடு படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments