Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

vinoth
சனி, 18 மே 2024 (07:53 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பல பிரச்சனைகளைக் கடந்து இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியன் ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் சினிமா வட்டாரத்தில் முதலில் ஜூன் 13 ஆம் தேதி என்றும் பிறகு ஜூன் 27 ஆம் தேதி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனையின் போது இந்தியன் 2 படக்குழுவைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் இன்று இந்தியன் 2 பற்றி ஏதேனும் முக்கிய அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments