Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (14:29 IST)
பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இந்த படம் வசூல் செய்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’
 
இந்த படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் முதல் நாளே இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருந்த நிலையில் நான்கு நாட்களில் இந்த படம் 555 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஜவான் உள்பட ஒரு சில ல இந்திய திரைப்படங்களே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அந்த பட்டியலில் ’கல்கி 2898 ஏடி’ படமும் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments