Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களரி கற்கும் நடிகை லிஸி

களரி கற்கும் நடிகை லிஸி
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (15:05 IST)
முன்னாள் நடிகை லிஸியும், அவரது கணவர் இயக்குனர் ப்ரியதர்ஷனும் திருமண பந்தத்தில் கசப்புற்று தற்போது பிரிந்து வாழ்கின்றனர். ப்ரியதர்ஷன் எப்போதும் போல் காப்பி படங்களாக இயக்குகிறார். லிஸி...?
 
லிஸி தனது ஃபேஸ்புக்கில் களரி பயிலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த களரி தற்காப்புக்கலை பயிற்சிப் பட்டறையில் லிஸி கலந்து கொண்டார்.
 
கடந்த இரு வாரங்களாக களரி பயின்று வருவதாகவும், யோகாவைப் போன்று களரியும் மனதை ஒருமுகப்படுத்தி விழிப்புணர்வை அதிகப்படுத்துவதாகவும், தினசரி யோகா செய்யும் ஒரு நபர் என்ற வகையில் களரியும் யோகாவைப் போன்றதே என்று தன்னால் உறுதியளிக்க முடியும் எனவும், அனைவரும் களரியில் சிறிதளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும், களரி கலையை அழியவிடக் கூடாது என்றும் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.
 
களரி படித்த கையோடு வெள்ளித் திரைக்கும் வந்துவிடுங்கள். ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil