Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரை உலகத்தினர் நடத்த இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி தள்ளி வைப்பு. புதிய தேதி என்ன?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (12:37 IST)
திரை உலகினர் சார்பில் கலைஞர் 100 என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழ் திரை உலகினர் ஒன்று சேர்ந்து கலைஞர் 100 என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு ஸ்டேடியத்தில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற திட்டமிட்டு இருந்தனர். இதற்கான அழைப்பிதழ் அடிக்கப்பட்டது என்பதும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியவர்களிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிகழ்ச்சியில் அஜித், விஜய் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் யாரும் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது என்றும்  ஆர்கே செல்வமணி கூறியிருந்தார் 
 
இந்த நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினம் என்பதால் அன்றைய தினத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்தது தவறு என்று அதிமுகவினர் குரல் கொடுத்தனர். எனவே இந்த நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது
 
இந்த நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த கலைஞர் 100 நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments